ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இதோ சில எளிய குறிப்புகள்!
                    
                Beauty Tips
            
                    
                Heathy and thick hair
            
            
        
            
                
                By Balakumar
            
            
                
                
            
        
    ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலருக்கு தலைமுடி அதிக அளவில் உதிர்வதால், பலரும் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர்.
மேலும் இதன் காரணத்தினாலேயே நிறைய பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
இதில் இந்த பிரச்சினையை போக்க பலர் அதிகம் செலவழித்து கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவண்டு. இருப்பினும் நிரந்த தீர்வை தராது.
அதற்கு இயற்கைமுறையில் சில வழிகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- அவகேடோ பழத்தை மசித்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள சிறந்த பலன் கிடைக்கும்.
- இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடையும்.
- வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெய்யை தனியாக எடுத்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். ஒரு வாரத்தில் 2 முறை இந்த செயலை செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமைப் பெறும்.
- நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, தலை முழுவதும் தடவி 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். இது மயிர்கால்களை பலப்படுத்தும் மற்றும் தலைமுடி உடைவதைத் தடுக்கும்
- தேங்காய் க்ரீம்மை முடியின் வேர் முதல் முனை வரை தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடி வலிமையடைந்திருப்பதை நன்கு காணலாம்.
- இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெய்யை ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். 
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        