பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க
பொதுவாகமாதவிடாய் பிடிப்புகள், அடிவயிற்று வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் என பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மாதவிடாய் காலங்களில் அவர்களால் தங்கள் அன்றாட வேலைகளைக் கூட செய்ய இயலாது. இதனை குறைக்க வலி நிவாரணிகளை அடிக்கடி எடுப்பது முற்றிலும் தவறாகும்.
மாதவிடாய் வலியை குறைக்க ஒரு சில தேநீர் வகைகள் நமக்கு கை கொடுக்கின்றன. ஒவ்வொரு தேநீரிலும் நாம் சேர்க்கும் பொருட்கள் மாதவிடாய் தசை இறுக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது
அந்தவகையில் எந்தெந்த தேநீர்களை பருகி மாதவிடாய் வலியை விரட்டலாம் என அறிந்து கொள்வோம்.
இஞ்சி டீ
இந்திய சமையலறையில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் இஞ்சி ஆகும். ஒரு அங்குல இஞ்சியை தோல் சீவி கொதிக்கின்ற தண்ணீரில் அல்லது பாலில் கலந்து கொள்ளுங்கள். அதனுடன் தேயிலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளன. இது மாதவிடாய் அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது. குறைக்க இஞ்சி உதவியாக இருக்கும்.
பெருஞ்சீரக டீ
ஒரு கப் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் பெருஞ்சீரக விதைகள் மற்றும் 1/4 டீ ஸ்பூன் தேயிலை கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். வேண்டுமானால் பால் கூட பயன்படுத்தலாம். இதுவும் உங்க மாதவிடாய் பிடிப்புகளை குறைக்க பயன்படுகிறது. பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது வயிற்று வீக்கம் மற்றும் வயிற்று பிடிப்புகளுக்கு உதவுகிறது.
கெமோமில் டீ
2 கப் கொதிக்கின்ற நீரில் 2-3 டீ ஸ்பூன் கெமோமில் இலைகளை சேர்த்து கொதிக்க விடவும். 5-8 நிமிடங்கள் கொதிக்க விட்ட பிறகு வடிகட்டி பருகுங்கள். சுவைக்கு தேன் சேர்த்து கொள்ளுங்கள். கெமோமில் தாவரத்தின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் கெமோமில் தேநீர், நம் உடலில் ஒரு அமைதி விளைவைக் கொடுக்கிறது. எனவே இது மாதவிடாய் அறிகுறிகளை போக்குகிறது.
க்ரீன் டீ
கொதிக்கும் நீரில் 1 டீ ஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கொதிக்க விடவும். 5-10 நிமிடங்கள் அதை கொதிக்க விட வேண்டும். கசப்பு சுவை இருந்தால் அதில் லெமன் மற்றும் தேன் சேர்த்து பருகுங்கள்.
இது வயிற்று வீக்கம் மற்றும் மாதவிடாய் அசெளகரியத்தை போக்க உதவுகிறது. மாதவிடாய் பிடிப்புகளை நீக்க உதவுகிறது.



