உங்கள் பற்களை பளீச் என மாற்ற வேண்டுமா? இதோ சில சில டிப்ஸ்!
நீங்கள் ஒருவரின் முகத்தை பார்த்து பேசும்போது கவனிக்கும் முதல் விடயமே அவருடைய பற்களாகத்தான் இருக்கும்.உங்களது சிரித்த முகமே உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம்.
சில பேர் பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதே என சிரிக்கக்கூட மாட்டார்கள்.இதனை சரியாக்க ஆயிரக்கணக்கில் பணத்தை செலவலித்து மருத்துவரை கூட அணுகுவார்கள்.ஆனால் இதனை இயற்கையில் குணப்படுத்தலாம்.
பற்கள் எதனால் மஞ்சள் நிறமாகிறது?
உங்களுக்கு வயதாகும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். அல்லது எனாமெல் தேயும்போது மஞ்சள் நிறமாகும். உங்கள் உணவு பழக்கவழக்கங்களும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு காரணமாகும்.
அதிக புகைப்பிடிக்கும் பழக்கம் அதிலுள்ள நிக்கோடின் உங்கள் பற்களை மஞ்சளாக மாற்றிவிடும்.
ஒரு சில உணவுகள் மற்றும் மற்றும் பானங்களிலிருந்து அமிலங்கள் வெளிப்படுவதால் பற்களிலுள்ள எனாமெல் தேய்ந்துவிடும்.
இந்த எனாமெல் வயதுக்கு ஏற்ப மெலிவதால் பெரும்பாலான பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்.
ஆனால் சில நீடித்த உணவுக் கறையுடன் கலந்தால் சாம்பல் நிற நிழலைப் பெறுகின்றன.
தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்குவதற்கான வழிகள் இங்கே!
பற்கள் மஞ்சளாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
முதலில், உங்கள் பற்களை 2 தடவைகள் துலக்குங்கள்.இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும்.
பல்துலக்குதல்
முதலில், உங்கள் பற்களை 2 தடவைகள் துலக்குங்கள்.இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும்.
ஆயில் புல்லிங்
இது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை ஆனால் காலையில் வெறும் வயிற்றிலேயே தேங்காய் எண்ணெயிலோ அல்லது வேறெந்த எண்ணெயிலோ வாயை கொப்ளிக்க வேண்டும்.
பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு
பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்தது பேஸ்டுடன் பிரஷ் செய்யவும்
பழங்கள் கொண்டு சுத்தப்படுத்தல்
- வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல்களை தேய்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள். இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்க எளிய வழிகளில் ஒன்று ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடுவது. பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய சாப்பிடுங்கள்.
- நீங்கள் சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு பல் துலக்குங்கள்..
- தேங்காய் எண்ணெய் தடவவும். உங்கள் நாக்கை துலக்குங்கள்.
- பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தவும்.
இந்த இயற்கையான வழிமுறைகள் உங்கள் பற்கள் மஞ்சளாவதை தவிர்த்து ஆரோக்கியமான பற்களை பேண உதவும்..