சுவிட்சர்லாந்தில் 1 CHF-க்கு வீடு வாங்க விருப்பமா? விவரங்கள் இதோ
சுவிஸ் நகரம் ஒன்றில் ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
Maggiore ஏரிக்கரையில் அமைந்திருக்கும் தெற்கு சுவிஸ் நகரமான Gambarogno, rustici என்று அழைக்கப்படும் கல் வீடுகளை ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்பனை செய்கிறது.
இதுபோல் குறைந்த விலைக்கு வீடுகளை விற்கும் வழக்கம் இத்தாலியிலும் ஸ்பெயினிலும் பரவலாக உண்டு. ஆனால், சமீப காலமாக சுவிட்சர்லாந்திலும் இந்த பழக்கம் அதிகரித்துவருகிறது.
ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடு கிடைக்கிறது என்றதும், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை வாங்க முன்வந்துள்ளார்கள்.
ஆனால், ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடு இருக்கிறது, நீங்கள் உடனே வந்து குடியேறிவிடலாம் என யாராவது விற்பனை செய்வார்களா?
அங்கேதான் இருக்கிறது விடயம்!
பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு நினைத்தவுடன் அந்த வீடுகளில் குடியேறிவிடமுடியாது...
அதாவது, அந்த வீடுகள் உடனடியாக குடியேறும் நிலையில் இல்லை, அவற்றை புதுப்பித்த பிறகுதான் அதில் குடியேற முடியும் என்கிறார் நகர மேயரான Gianluigi Della Santa.
அப்படி அந்த வீடுகளைப் புதுப்பிப்பதற்கே, பல்லாயிரக்கணக்கான சுவிஸ் ஃப்ராங்குகள் தேவைப்படும். அத்துடன், வீட்டிற்கான திட்டத்துக்கு உள்ளூர் கவுன்சில் ஒப்புதலும் அளிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.