பெண்களே! வெள்ளைப்படுதல் பிரச்சினையை சமாளிக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வைத்தியங்கள்
home remedies
amenorrhea
By Kishanthini
பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளை படுதல் (வெள்ளைப்படுதல்) பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும்.
இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளை படுதல் பிரச்னை இருக்கும்.
வெள்ளை படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
இந்த பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன்களை அளிக்கும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
- உளுந்து, பார்லி இரண்டிலும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்.
- சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும்.
- சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.
- அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியவற்றில் தலா 20 கிராம் எடுத்து தட்டிச் சாறு பிழிந்து அதில் படிகார பஸ்பம் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.
- சிவப்பு நிற தண்டுக் கீரைத் தண்டுடன் துத்தி இலையை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.
- கீழா நெல்லி இலை, கோவை இலை, அசோகமரப்பட்டை, நாவல்பட்டை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மோரில் கலந்து குடிக்கலாம்.
- சாணாக்கி கீரையுடன், சீரகம் சிறிதளவு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.
- அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
- எலிக்காதிலையுடன் கடுக்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US