முன் நெற்றியில் முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்..!
பொதுவாக வயதாக வயதாக மேல் நெற்றி பகுதியில் முடி ஏறிக்கொண்டே போகும். அதுவும் அவர்களது முக தோற்றமே வேறுபடும்.
பெண்களுக்கு தலையில் சொட்டையோ அல்லது வழுக்கையோ விழுகாது என்றாலும் பல பெண்களுக்கு முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டு போகும்.
அது அவர்களுது முக அழகையே பாதிக்கும். இதனை எளியமுறையில் கூட வளர செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும்போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது.
எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின்பு தலையலச வேண்டும் இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
- மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகி நெற்றியில் முடி வளர உதவுகிறது. மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.பின்பு சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலையலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
-
முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் அப்ளை செய்து. 5 நிமிடம் சுழற்சி வடிவில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு ஷாம்பு போட்டு தலையலச வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.
- சிறிதளவு பீட்ருட் இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை தண்ணீரில் வேகவைத்து, பின்பு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின்பு இந்த பேஸ்ட்டுடன் சிறுதளவு மருதாணி பொடி கலந்து, தலையில் அப்ளை செய்யவும்.பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலையை ஷாம்பு போட்டு அலச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர நெற்றியில் முடிய வளர ஆரம்பிக்கும்.
-
நெற்றியில் முடி வளர ஆலிவ் ஆயிலுடன் சிறிதளவு இலவங்க பட்டை பொடி மற்றும் ஒரு டீஸ்புன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவ வேண்டும்.
பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022