இளமையான முகத்தை பெற ஆசையா? அப்போ தேன் மட்டுமே போதும், இப்படி பயன்படுத்தி பாருங்க
இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
குறிப்பாக முகச்சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கின்றது.
அந்தவகையில் தற்போது தேனை எப்படியெல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
- தேனை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி எடுக்க வேண்டும். தினமும் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகப்பரு சரியாக கூடும்.
- தேன் ஒரு பங்கு மற்றும் தயிர் இரண்டு பங்கு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவி எடுக்கவும். தினமும் இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேனுடன் சம அளவு பப்பாளி கூழ் மசித்து சேர்க்கவும். சருமத்தில் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து மென்மையாக மசாஜ் செய்து விட்டால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும். சருமத்துளைகளை இறுக்கி வைக்கும். சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியில் முகத்தை துடைத்து விடவும்.
- வறண்ட ஈரப்பதமற்ற சருமம் மற்றும் சீரற்ற சரும பிரச்சனைகளுக்கு தேன் உதவக்கூடும். இதற்கு தயிர் - 2 டீஸ்பூனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு வெந்நீரால் முகத்தை கழுவி விடவும். இது வறட்சியை படிப்படியாக குறைக்க செய்யும்.
- மேக் அப் பயன்பாடு இருப்பவர்கள் அவ்வபோது சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். தூசு மாசு படிந்த சருமத்தை சுத்தம் செய்ய தேன் உதவக்கூடும். அதற்கு அரை தேக்கரண்டி தேனை கைவிரல்களில் தொட்டு விரல்களை தேய்த்து சூடுபடுத்தி சில துளிகள் நீரையும் அதனுடன் சேர்த்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்த பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி டோனரை பயன்படுத்தவும்.
- உதடு பளபளப்புக்கு சிறிது தேனை விரலில் தொட்டு உதட்டில் மென்மையாக மசாஜ் செய்து விடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் காலை உதடை கழுவி எடுக்கவும். சருமத்தில் இருக்கும் கோளாறை விரைவில் போக்கி விடும். தேன் விரிசல்கள் கொண்ட உதட்டை சரி செய்ய கூடும்.
குறிப்பு
- தேன் சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் சரும ஆரோக்கியத்தை மேலும் பதம்பார்த்துவிடும். தேன் சருமத்துக்கு பயன்படுத்துவதற்கு முன்பு அது உங்களுக்கு ஒவ்வாமையை உண்டு செய்கிறதா என்பதை சரிபாருங்கள். சிறிதளவு தேனை எடுத்து சருமத்தில் குறிப்பிட்ட இடத்தில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருங்கள்.
- பிறகு அந்த இடத்தை கழுவினால் பாதிப்பு இல்லாமல் இருந்தால் உங்களுக்கு தேன் சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்காது.அதே போன்று உதட்டுக்கு இரவு முழுவதும் தேன் பயன்படுத்துவதாக இருந்தாலும், தேன் மாஸ்க் போடும் போதும் சரும பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையை கேட்கவும் மறந்துவிட வேண்டாம்.