பருக்களால் உருவான கரும்புள்ளிகள் போக்க வேண்டுமா? இதோ அருமையான சில வழிகள்
Skin Care
By Kishanthini
நம்மில் பலருக்கும் அழகை கெடுக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பவை கரும் புள்ளிகள்.
முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதாலும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. முகப்பருக்கள் வந்தால் சிலர் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடுவார்கள்.
இதனால் பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன. இதனை போக்க ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு பவுலில், 4 ஸ்பூன் பாதாம் பொடி, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பால் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். அதை 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். இதனை தொடர்ந்து வாரம் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
- 1 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 ஸ்பூன் பால் மற்றும் 1/2 ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம், உடலில் உள்ள கரும்புள்ளிகளில் அப்ளை செய்து மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். 5 நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.
- ஒரு கிண்ணத்தில் சந்தனம், மஞ்சள் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து இந்த பேக் 80% காய்ந்து போகும் வரை விடவும். இப்போது தண்ணீரை கொண்டு ஸ்க்ரப் செய்தவாறே கழுவுங்கள். சந்தானம் குளிர்ச்சியானது என்பதால் பருக்கள் வராமலும் தடுக்க உதவுகிறது.
- ஒரு வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை எடுத்து சருமம் மற்றும் உடலில் ஸ்ப்ரப் செய்யவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து தேய்த்த பின்னர் கழுவவும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறைந்துவிடும்.குறிப்பு : முகப்பரு பிரச்னை இருப்பவர்கள் ஸ்க்ரப் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US