அரிக்கும் பொடுகை விரட்டி அடிக்க வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்
Beauty tips
By Kishanthini
பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் பொடுகு தொல்லை என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
அதுமட்டுமின்றி பொடுகினால் முகப்பருக்கள் அதிகமாகும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த ஒரு சில இயற்கை பொருட்கள் உதவுகின்றன.
அந்தவகையில் பொடுகை விரட்டி கூந்தலை பளபளப்பாக வைத்து கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கரைய விட்டு அதைத் தலையில் தேயுங்கள். இரவில் தலையில் தேய்த்து அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளியுங்கள். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தேயத்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பின்பு தலையை ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடி பளபளப்பாகவும் பொடுகு இல்லாமலும் இருக்கும்.
- ஒரு கைப்பிடியளவு வேப்பிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
நன்கு ஆறியதும் தலைக்கு குளிக்கும் போது இந்த நீரில் தலைமுடியை அலசுங்கள். பொடுகு பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
தலைக்கு ஷாம்பு தேய்த்துத் தலையை அலசிய பிறகு, தலைக்கு வேப்பிலை நீரை ஊற்றி அலசுங்கள். இது தலைமுடிக்கு நல்ல கண்டிஷ்னராகவும் செயல்படும். பொடுகுத் தொல்லையும் மறையும்.
- 10 சின்ன வெங்காயத்தை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும்.
- 5 சின்ன வெங்காயம் 2 இன்ச் அளவுக்கு இஞ்சி இரண்டையும் எடுத்து துருவிக் கொள்ளுங்கள். அதை ஒரு வடிகட்டி அல்லது துணியில் வைத்துப் பிழிந்தால் சாறு கிடைக்கும்.
இந்த சாறை தலையின் வேர்க்கால்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற விட்டு பின் தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
- வால்மிளகை பொடி செய்து பாலில் குழைத்து உச்சந்தலையில், முடியின் வேர்க்கால்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் பொடுகு நீங்கும்.
- ஷாம்பு தேய்த்து தலைக்கு குளித்து முடித்தபின், கன்டிஷ்னர் பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக சிறிது வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து தலையை அலச வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்யுங்கள்.
இப்படி செய்து வந்தால் பொடுகால் ஏற்படும் அரிப்பும் தீரும். பொடுகு இருந்த இடம் தெரியாமல் போகும்.
- கருந்துளசியுடன் 10 மிளகையும் சேர்த்து நன்கு மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தலையில் தேய்த்து குளித்தால் பொடுகால் தலையில் ஏற்படும் காயங்கள் ஆறும்.
துளசி, மிளகு இரண்டுமே உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அடிக்கடி செய்ய வேண்டாம். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தால் போதுமானது.
- எலுமிச்சை சாறை நேரடியாகத் தலையின் வேர்க்கால்களில் தேய்த்து ஊறவிட்டுக் குளிக்கலாம்.
அதேபோல எலுமிச்சை பழத்தின் சாறைப் பிழிந்து அதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்க்கால்களில் நன்கு தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
- 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் நன்கு மை போல அரைத்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை தீரும். தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
- பொடிப்பொடியாக நெல்லிக்காயை நறுக்கி. நன்கு வெயிலில் உலர்த்திக் காயவைத்து, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நெல்லி வற்றலுடன் பால் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டு நன்கு அரைக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி குளித்தால் இளநரை மறைவதோடு கருமையாக, அடர்த்தியாக முடி வளரும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US