பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா? இதோ அற்புதமான சில எளிய டிப்ஸ் உங்களுக்காக!
பொதுவாக சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு.
குறிப்பாக, இளம் வயதினருக்கு தர்மசங்கடத்தைத் தரும் பிரச்சினையாக உள்ளது.
இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு.
அதோடு சில சரும நோய்கள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
எனவே முடிந்தவரை இதனை போக்குவது நல்லது. தற்போது பொடுகை விரட்ட கூடிய சில எளிய இயற்கை வழிகளை பார்ப்போம்.
- மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
- தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
- பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
- கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
- தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
- வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.
- துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
- வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.
- நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.
- தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
- முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
- முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.