முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா? சில சூப்பரான வழிகள் இதோ!
Skin Care
By Kishanthini
பொதுவாக நமது சருமத்தில் இறந்த செல்கள் அப்படியே தங்கி விடுவதால் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சருமத்தில் இறந்த செல்கள் தங்குவதால் அவை சருமத்தில் தொற்றை ஏற்படுத்துகின்றன.
இதனால் முகப்பரு, டாட் ஸ்பாட்ஸ் போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படுகின்றன. இதில் இருந்து விடுபட ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- 2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 ஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.
- காபி பொடியுடன் தேனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இறந்த செல்கள் விரைவிலே நீக்கி விடும்
- .2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும்.
பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- ஸ்ட்ராவ்பெரியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். ஸ்ட்ராவ்பெரியில் உள்ள வைட்டமின் சி, இறந்த செல்களை அகற்றி பொலிவை தரவல்லது.
- 1 ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய்யுடன்1 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை அலசவும். இதில் முட்டையின் வெள்ளை கருவிற்கு இறந்த செல்களை அகற்றும் தன்மை உள்ளதாம்.
- 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US