சரும துளைகள் பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக்க வேண்டுமா? அப்போ வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்
பொதுவாக பெண்கள் சிலருடைய முகத்தில் சரும துளைகள் காணப்படுவதுண்டு. இது ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும்.
அதனால் அவர்களுடைய முகம் மிருதுவாக அல்லாமல் முரட்டுத்தனமாக தோன்றும். சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது தான் ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும்.
அவை சரும அடுக்குகளுக்குள் எளிதாக ஊடுருவி பருக்கள், கொப்பளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சரும துளைகளை சரியாக பாராமரிக்க விட்டால் மேலும் பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவற்றை கண்டறிந்து ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. தற்போது சரும துளைகள் பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக்க என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- பருக்கள் அதிகம் கொண்டவர்கள் சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் அல்லது பால் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பாரபின் மற்றும் வாசனம் சேர்க்காத பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.
- ஃபேஸ் ஸ்க்ரப் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது இறந்த செல்களை மென்மையாக மாற்றி நீக்குகிறது மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள், தூசி நீங்கி உங்கள் சருமம் மென்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். இதனால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும். மேலும் பிளாக்ஹெட்ஸ், பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள், மூடப்பட்ட துளைகள் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது.
- சரும பிரச்சனைகளை நீக்கவும் ஆவி பிடித்தல் சிறந்த முறையாகும். சூடான நீரில் இருந்து வெளியாகும் நீராவி முகத்தில் படும் போது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு, சுத்தமும் செய்கிறது.
- ஒரு தேக்கரண்டி சார்கோல் பவுடரை எடுத்து, அதில் ஐந்து துளிகள் பாதாம் எண்ணையை கலந்து கொள்ளவும். இந்த மாஸ்க்கை உங்கள் முகம் முழுவதும் பூசி நன்கு காயும் வரை காத்திருந்து பின்னர் மெதுவாக பிரித்தெடுக்கவும். இப்படி செய்து வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள துளைகள் திறந்து புத்துணர்ச்சியாகும்.
- சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் சருமத்தில் உள்ள அழுக்கை எடுக்கவும் முல்தானி மிட்டி உதவுகிறது. முல்தானி மிட்டியுடன், கிளிசரின் மற்றும் தேனை 1 டீஸ்பூன் கலந்து மாய்ஸ்சுரைசிங் ஃபேஸ் மாஸ்க் ஒன்றை தயார் செய்து, அதனை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்துங்கள். எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
- ஓட்ஸை நன்றாக பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் உலர விடவும், பின்னர் தண்ணீரில் கழுவவும். அனைத்து சருமத்தினருக்கு இதனை தொடந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், பப்பாளி, ஆரஞ்சு, பப்பாளி, அவகோடா ஆகியவற்றை எடுத்து நன்கு ஒன்றாக மசித்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் தடவவும். பின்னர் இதை 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.