வியர்க்குருவை விரைவாக போக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்
பொதுவாக கோடைக்காலத்தில் வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாடாய்படுத்தும்.
வியர்க்குரு ஒருவருக்கு வந்தால், அது ஊசியால் சருமத்தை குத்துவது போல் இருப்பதுடன், எரிச்சலுடனும் இருக்கும்.
வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறிவிடும்.
எனவே வியர்குருவை விரட்ட உதவும் சூப்பரான ஒரு டிப்ஸை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- வெள்ளரிக்காய் துண்டுகள் - 5
- கற்றாழை ஜெல் - 3 டீஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
வெள்ளரிக்காய் தோல் நீக்கி அதை நன்றாக மசித்து எடுக்கவும்.
அதனுடன் கற்றாழை ஜெல் கலந்து நன்றாக குழைத்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் படும்படி தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு மந்தமான நீரில் சுத்தம் செய்யவும். தினமும் ஒரு வேளை செய்யலாம்.
பக்கவிளைவுகள் உண்டாக்குமா?
- கற்றாழை பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் ஒரு பேட்ச் பரிசோதனை செய்ய வேண்டும். வெள்ளரிக்காய் பக்கவிளைவை உண்டு செய்யாது. அனைவரும் பயன்படுத்தலாம்.
- குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்தவும்.