தழும்புகளை சுலபமாக மறைக்க வேண்டுமா?
Beauty Tips
Scars
Skin Problem
By Kishanthini
பொதுவாக நம் உடலில் ஏகப்பட்ட தழும்புகள் காணப்படும்.
ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன. இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது.
இதனை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளள.
லேசர் சிகிச்சைகள், பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். ஆனால் மேலும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
எவ்வித பக்கவிளைவுகளுமின்றி ஒரு சில இயற்கை வழிகள் மூலம் போக்கலாம் தற்போது அவற்றை பார்ப்போம்.
- தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.
- சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.
- பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்.
- எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.
- கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.
- தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும். காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
- சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும். தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US