பாதங்களை வெடிப்பின்றி மிருதுவாக வைத்து கொள்ள வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!
பொதுவாக முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள எல்லோரும் பெரிய அளவில் மெனக்கெடுகிறோம்.
அதேநேரம், நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை. இதனால் தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.
நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். எனவே இவற்றை எளியமுறையில் போக்கலாம்.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வாழைப்பழத்தை நன்றாக மசித்து வெடிப்பின் மேல் தேயுங்கள். சில நிமிடங்களில் கழுவுங்கள். இவை ஒரே வாரத்தில் பாத வெடிப்பை மறையச் செய்து மிருதுவான பாதத்தை தரும்.
- வாசலினை எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் கழுவுங்கள். சாக்ஸ் போட்டுக் கொள்வதால் இன்னும் நல்லது.
- ஆலிவ் எண்ணெயில் சில துளி லாவெண்டர் எண்னெய் கலந்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். இது அற்புதமான ரிசல்ட்டை தரும். விரைவில் வெடிப்பிலிருந்து குணம் பெறுவீர்கள்.
- விளக்கெண்ணெயை சூடுபடுத்தி மஞ்சள் கலந்து தூங்குவதற்கு முன் வெடிப்பில் இந்த எண்ணெயை பூசிக் கொண்டு படுங்கள். இவை ஒரு சில நாட்களில் வெடிப்பை போக்கும்.
- வினிகரை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதங்களை அதில் 10 நிமிடம் தினமும் ஊற வைக்கவும். பின்னர் ஸ்கர்ப் செய்யுங்கள். மிக விரைவில் பலன் தரும். மேலும் வெடிப்பு உண்டாகாமலும் தடுக்கும்.
- தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அதே அளவு பால கலந்து பாதத்தில் தடவவும். மறு நாள் காலையில் கழுவுங்கள். இது பாதங்களை மிருதுவாக்கும். சொரசொரப்புத்தன்மையை நீக்கும்.
-
ஓட்ஸை பொடித்து அதனைக் கொண்டு தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்யுங்கள். இவை கால்களை மிருதுவாக்குவதோடு, பாதங்களை அழகாக்கு. ஓஸினால் தேய்க்கும்போது பாதங்களின் பக்கவாட்டில் இருக்கும் கருமையை எளிதில் மறையச் செய்யும்.
-
ஓட்ஸுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இன்னும் நல்ல பலன்களை தரும். ஓட்ஸை பொடி செய்து அவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தேயுங்கள். சில நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த குறிப்பு இன்னும் வேகமாக பலனைத் தரும்.
- லிஸ்டெரின் வினிகர் மற்றும் நீர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். அல்லது இவை கலந்த நீரில் 15 நிமிடம் பாதங்களை ஊற விடுங்கள். இவை விரைவில் வெடிப்பை குணப்படுத்தும்.
-
பாதம் மூழ்கும் அளவிற்கு நீரை வெதுவெதுப்பக எடுத்துக் கொண்டு அதில் ஆப்பிள் சைடர் வினிகரை 1 மூடி கலந்து பாதங்களை 10 நிமிடம் ஊற வைகக்வும். வாரம் 3 நாட்கள் செய்தால் வெடிப்பு மறையும். தவிர பாத வெடிப்பு வருவதை தடுக்கலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.