முகம் பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள் !!
Beauty Tips
By Kishanthini
பொதுவாக பலருக்கும், தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அந்த அழகை எப்படி பெறுவது என்பது பற்றிய சில பலருக்கு விஷயங்கள் தெரியாது.
சிலர் சீக்கரம் அழகாக வேண்டும் என்று க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் முழுதும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட, நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகளை அளிக்கும் அல்லது சருமம் மேலும் கருப்பாகிவிடும்.
எனவே இதுபோன்ற பிரச்சினையை வரமால் இருக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன.
அந்தவகையில் தற்போது முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- மஞ்சள் தூள், புதினா சாறு கலந்து, உங்கள் முகப்பரு வடுக்களுக்கு தடவலாம். இதை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- சமையல் சோடா மற்றும் நீர் இவற்றை ஒரு கலவையாக செய்து வைத்து 4 நிமிடங்கள் வடுக்கள் மீது பேஸ்ட் போல போடவும், இதை சூடான நீரில் அலச வேண்டும்.
- வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
- கொத்தமல்லி இலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் இருவேளை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவுபெறும். முகப்பரு தொந்தரவும் குறையும்.
- ஒரு கைப்பிடி துளசியுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து நன்றாக குழைத்து, முகத்தில் பூசுங்கள். உலர்ந்த பின்பு கழுவுங்கள். துளசி சரும பொலிவை மேம்படுத்தும். மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையும் தீரும்.
- முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US