தொப்பையை வேகமாக குறைக்க தினமும் இந்த ஜூஸை 2 டம்ளர் குடித்து வந்தாலே போதும்!
இன்றைய மக்களை அதிகமான மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் ஒர் பிரச்சினை என்னவென்றால், அது தொப்பை தான்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே இந்த பிரச்சினையால மிகவும் அவஸ்தைப்படுவதுண்டு.
அதிகளவு கொழுப்புள்ள உணவுகளை உண்பதால், உடலில் கொழுப்பு சேர்கிறது. குறிப்பாக அடி வயிற்றில் தேவையில்லாத சதையாக தங்குகிறது. இதனை குறைக்க பலர் பலவகையில் முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர்.
தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. இந்த பானத்தை தினமும் குடித்து வர, உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறைந்து, சிக்கென்று மாறலாம்.
இப்போது தொப்பையை வேகமாக கரைக்க உதவும் அந்த பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை - 1
- கற்றாழை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
- தேன் - சிறிது செய்முறை
செய்முறை
முதலில் இஞ்சியை கற்றாழை ஜூஸில் போட்டு கிளறி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.
இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அப்படி இந்த ஜூஸைக் குடித்தால், ஒரு மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடக்கூடாது. மேலும் இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 1-2 முறைக்கு மேல் குடிக்கக்கூடாது.