அசுர வேகத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? 15 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகை பானத்தை குடித்தால் போதும்!
இன்றைய நாளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைக்க பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால், அவை பெரும்பாலும் அவர்களுக்கு பலனை தருவதில்லை. உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் இல்லாமல் உடல் கொழுப்பை இழப்பது சாத்தியமில்லை என்ற உண்மையை யாரும் இங்கு மறுப்பதற்கில்லை.
இந்த இரண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதோடு, எடையை திறம்பட நிர்வகிக்கவும், உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவும்.
ஆனால் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை விரைவுபடுத்தவும், உங்கள் கொழுப்பு இழப்பு இலக்கை வேகமாக அடைய ஒரு சில இயற்கை பானங்கள், மூலிகை மருந்து பானங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
அந்தவகையில் உடல் எடையை குறைக்கும் ஒரு அற்புத மூலிகை பானம் ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு - 10
- சோம்பு - 1 ஸ்பூன்
- நெருஞ்சல் முள் பொடி - 1 ஸ்பூன்
- நீர்முள்ளி விதை பொடி-
- தண்ணீர் - 4 டம்ளர்
செய்முறை
முதலில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நெருஞ்சல்முள் பொடி,மிளகு, சோம்பு சேர்த்து இறுதியாக நீர்முள்ளி விதை பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதிக்க வைத்து 2 டம்ளராக பிரித்து எடுத்து 3 வேளைகள் காலை மாலை இரவு என குடித்து வந்தால் நல்லது.
15 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இதன் பலன் கண்முன்னே தெரியும். சாப்பாட்டின் முன் குடிப்பது நல்லது. மற்றும் குடித்து முடித்து அரை மணி நேரம் எதுவும் சாப்பிட வேண்டாம். கொழுப்பில்லா உணவுகளை எடுத்து கொள்வது தவிர்க்கவும்.