உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா? இப்படி 5 விதமாக நீரை குடிங்க போதும்
பொதுவாக இந்த காலத்தில் உடல் பருமன் மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இதனை எளியமுறையில் குறைக்க தினமும் காலையில் பல்வேறு வகையான தண்ணீரைக் குடித்தால் போதும்.
இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். 5 நாட்களுக்கு வெவ்வேறு எடை இழப்பு நீர்களை குடித்து வந்தாலே போதும்.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வெந்தய நீர்
வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது.
உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் தினமும் காலையில் வெந்தய நீரை அருந்த வேண்டும். 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.
பெருஞ்சீரக தண்ணீர்
பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் எடை குறைக்க உதவி புரிகின்றது.
1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த நீரை காலையில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடிக்கவும்.
எலுமிச்சைப்பழ நீர்
எலுமிச்சை நீர் எடை இழப்புக்கு எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, எடை வேகமாக குறைகிறது.
தினமும் காலையில் எலுமிச்சைநீரை குடிக்கவும். எலுமிச்சை சாற்றை வெந்நீரில் சேர்த்து குடிக்கவும்.
சீரக நீர்
சீரகத் தண்ணீர் உடல் எடை குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்து வந்தால், சில நாட்களில் உடல் பருமன் குறையும்.
1 கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் விட்டு விடுங்கள். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடிக்கவும்.
ஓமம் தண்ணீர்
ஓமம் போட்ட தண்ணீரைக் குடிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது.
1 டீஸ்பூன் ஓம விதைகளை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடிக்கவும்.