உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி எடையை வேகமாக குறைக்க வேண்டுமா?
Fat
Weight Loss
Belly Fat
Drink
By Kishanthini
பொதுவாக உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றினாலே செரிமான மண்டலத்தில் இருக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்கும்.
இது உடல் எடை குறைவதற்கும், தொப்பை குறைவதற்கும் வழிவகுக்கிறது.
நச்சுத்தன்மைகளை வெளியேற்றவும், எடை இழக்கவும் பெரிதாக டயட் இருக்கத் தேவையில்லை.
ஒரு சில இயற்கை பானங்களை எடுத்து கொண்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் சில ஆப்பிள் துண்டுகளை சேர்த்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கவும். இந்த பானத்தில் நீங்கள் இலவங்கப்பட்டையின் சிறிய பகுதியையும் சேர்க்க வேண்டும். இது உடல் எடை குறைப்பதற்கு உதவும் மற்றும் சுவை மொட்டுகளை மகிழ்விக்கும்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சில கிரேப் ப்ரூட் பழங்களை சேர்க்கவும். கூடுதல் சுவைக்காக நீங்கள் சில புதினா இலைகளை இதில் சேர்த்து குடிக்கலாம்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். இந்த பானத்தில் ஐஸ் க்யூப்ஸையும் சேர்த்துக் கொள்ளலாம், இதனால் உடல் எடையைக் குறைக்கும் போது புத்துணர்ச்சியுடனும் சுவையுடனும் இருக்கும்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் சில ஆரஞ்சு துண்டுகளை சேர்க்கலாம் அல்லது ஒரு ஆரஞ்சு பழச்சாறில் சுவைக்கு ஏற்ப சிறிது கல் உப்பை சேர்க்கலாம். இந்த பானம் எடை குறைக்க உதவுகிறது, ஏனெனில் ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் சில வெள்ளரி துண்டுகளை சேர்க்கவும். இதனுடன் ருசிக்காக கல் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து புதினா இலைகள் போட்டு குடிக்கவும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US