30 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பானத்தை தொடர்ந்து குடித்தாலே போதும்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் வீட்டிலேயே ஒரு சிறப்பு செய்முறையை பின்பற்றுவதன் மூலம் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்.
அதில் தொப்பையை எளியமுறையில் குறைக்க ஓமம் உதவுகின்றது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்று இங்கே பார்ப்போம்.
எப்படி பயன்படுத்தலாம்?
ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடியுங்கள். இதனால் தொப்பை கொழுப்பு குறையும். இதில் தைமால் உள்ளது, இது தொப்பையை குறைக்க உதவுகிறது.
ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.
நன்மை
ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய் நீங்கும், இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.