இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த சூப்பை குடிங்க போதும்
உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். ஒரு வேலை கொழுப்புத் திட்டுக்கள் ரத்த நாளங்களில் படிய ஆரம்பத்தால் ஒரு கட்டத்தில் ரத்தம் சீராக சென்று வர முடியாது அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே குறைப்பது நல்லது.
அந்தவகையில் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை எளிய முறையில் குறைக்க கூடிய சூப் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- கேரட் - 6
- தக்காளி - 1
- பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
- மிளகு தூள் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கரம் மசாலா தூள் - சிறிது
- வெண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை
முதலில் கேரட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.