உங்கள் வீட்டில் பணம் நிலைக்க வேண்டுமா? அப்போ இந்த எளிய சூட்சம பரிகாரத்தை பின்பற்றுங்கள்
money
hinduism
By Kishanthini
பொதுவாக சில வீடுகளில் பண வரவு அதிகமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்த பணம் செலவாகி விடுகிறது, கையில் பணம் தங்குவதே இல்லை, புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் ஆன்மீகப்படி ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் எளிய முறையில் பணத்தை நிலைக்க வைக்க முடியும்.
தற்போது அந்த பரிகாரம் என்ன என்பதையும் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பரிகாரம்
- ஒரு கண்ணாடி டப்பாவை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பச்சரிசியை சேர்க்க வேண்டும். அதன்மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.
- பிறகு மீண்டும் சிறிதளவு பச்சை அரிசியை சேர்த்து அதன் மீது ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.
- அதன் பின் ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது சிறிதளவு பச்சரிசியை சேர்த்து அதற்கு மேல் பத்து ரூபாய் நாணயம் வைத்து இறுதியாக சிறிதளவு பச்சரிசியை கண்ணாடி டப்பா நிறையும் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு இந்த டப்பாவை மூடி போட்டு மூட வேண்டும். அதன்பின் இந்த டப்பாவின் மூடியின் மீது ஆறு துளைகள் இடவேண்டும்.
- பின்னர் இந்த டப்பாவை பூஜை அறையில் வைத்து விடவேண்டும். வேலை செய்யும் இடமாக இருந்தால் நமது கண் பார்வை படும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- மாதம் ஒருமுறை இந்த அரிசியை மாற்றி விட்டு மறுபடியும் இவ்வாறு செய்து வைக்க வேண்டும். இதில் உள்ள அரிசியை காகம், குருவி போன்ற உயிரினங்களுக்கு உணவாக அளித்து விட வேண்டும்.
- இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் பணவரவையும், செல்வம் பெருகுவதையும் உங்களால் உணர முடியும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US