முகத்தை இயற்கைமுறையில் ஜொலிக்க செய்ய வேண்டுமா? இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!
பொதுவாக பெண்கள் அனைவருமே சரும அழகை அதிகரிக்க விரும்புவோம். இதற்காக நம்மில் சிலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட ஃபேஸ் கிரீமை பயன்படுத்துவண்டு. ஆனால் இது நிரந்த தீர்வினை தராது.
இதனை தவிர்த்து இயற்கையான முறையில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை பராமரிக்கும் போது, சருமம் என்றும் இளமையுடனும், பொலிவுடனும் இருப்பதுடன் சருமத்திற்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
அந்த வகையில் சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள காபி தூள்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- காபித்தூள் - ஒரு கப்
- பட்டை பொடி - 2 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
- சர்க்கரை - ஒரு கப்
செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்த கொண்டு வாரத்தில் மூன்று முறை உடலுக்கு ஸ்க்ரப் செய்து கொள்ளலாம்.
முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும்.
காபி முகத்தில் அதிகப்படியாக சுரக்கும் எண்ணெய் பிசுக்கை குறைக்கும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி இந்த ஸ்க்ரப் முகத்தை பொழிவு பெற செய்கின்றது