வயிறு தொப்பையை மட்டும் குறைக்கணுமா? இந்த எட்டு வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்!
இன்றைய மக்களை அதிகமான மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் ஒர் பிரச்சினை என்னவென்றால், அது தொப்பை தான், ஆன்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே இந்த பிரச்சினையால மிகவும் அவதிப்படுறாங்க.
அதிகளவு கொழுப்புள்ள உணவுகளை உண்பதால், உடலில் கொழுப்பு சேர்கிறது. குறிப்பாக அடி வயிற்றில் தேவையில்லாத சதையாக தங்குகிறது. அதை தான் நாம் தொப்பை என்கிறோம். சில வகை உடற்பயிற்சிகள், வாழ்க்கை முறை மாற்றம் மூலம் இந்த கொழுப்பை குறைக்கலாம்.
அந்தவகையில் தொப்பை குறைக்க என்னென்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்.
- தண்ணீர் உடலின் மிக முக்கியமான அங்கமாகும். இது தொப்பை கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. எனவே ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் 8 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். எனவே தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் மற்ற பானங்களை தவிர்த்து தண்ணீரை அதிகமாக குடிக்க முயற்சிக்கலாம்.
- சரியான அளவில் தூக்கம் இல்லாத போது அவர்கள் அதிகப்படியான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். எனவே நாம் நல்லப்படியாக உறங்குவது மிக முக்கியமாகும்.
- தொப்பை கொழுப்புகளை குறைக்க உணவை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.. இதனால் உங்கள் கீழ் வயிற்றில் கொழுப்புகள் குவிவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மேலும் உணவை தவிர்ப்பதன் காரணமாக பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கலோரி அளவு குறைவதற்கு பதிலாக நாள் இறுதியில் நீங்கள் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது
- நீங்கள் தினசரி உணவை தவிர்ப்பதற்கு பதிலாக, உட்கொள்ளும் கலோரி அளவை குறைக்கலாம். தினமும் மூன்று வேளையும் உணவை உண்ணலாம். ஆனால் சாதரணமாக உண்ணும் அளவை விட சற்று குறைத்து உணவை உண்ண முயற்சி செய்யலாம். ஏனெனில் நமது உடலுக்கு நாள் முழுவதும் இயங்குவதற்கான ஆற்றல் தேவைப்படுவதால் நாம் தினசரி உண்பதை தவிர்க்க கூடாது.
- வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகளாகவே அவை இருக்கின்றன. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது இலக்கு வைத்து அதற்கு போதுமான நேரத்தை செலவழித்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் வயிற்று கொழுப்புகளை குறைக்க முடியும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. மேலும் உங்கள் உணவை எளிதில் ஜீரணிக்கவும் உங்கள் பழைய தோற்றத்தை பெறவும் க்ரீன் டீ உதவுகிறது.
- நீங்கள் உங்கள் எடை அதிகரிப்பதை விரும்பவில்லை அல்லது உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் எனில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
- தொப்பை ஏற்படுவதற்கு ஆல்கஹாலும் ஒரு காரணமாக உள்ளது. ஆல்கஹால் பானங்களில் வெற்று கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. நீங்கள் தொடர்ந்து இவற்றை குடித்து கொண்டிருந்தால் அது உங்கள் அடி வயிற்றில் போய் சேரும். இதனால் அடி வயிற்றில் தொப்பை ஏற்படும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.