முகத்தில் வளரும் முடிகளை எளியமுறையில் நிரந்தரமாக நீக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்
பொதுவாக நம்மில் சில பெண்களுக்கு காது ஓரங்களிலும், கன்னத்திலும், தாடையின் கீழும், உதட்டுக்கு மேல் மீசை போன்றும் அதிகப்படியான முடிகளைப் பார்க்கலாம்.
ஆனால் அழகை விரும்பும் பெண்களுக்கு இது அதி முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இதற்காக சிலர் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் இவை தற்காலிக தீர்வாகவே இருக்குமே தவிர நிரந்தரமாக இருக்காது .
இந்த முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எளிய வழிமுறைகள் ஒன்றை இங்கே பார்ப்போம்.
Image- timesofindia
தேவையானவை
- கோரைக்கிழங்கு பொடி
- பூலாங் கிழங்கு பொடி
- குப்பை மேனி இலை பொடி
- கஸ்தூரி மஞ்சள் பொடி
- எலுமிச்சைச்சாறு
செய்முறை
கோரைக்கிழங்கு பொடி, பூலாங் கிழங்கு பொடி, குப்பை மேனி இலை பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி நான்கையும் சம அளவு வாங்கி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்தும்போது இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து முடி இருக்கும் பகுதியில் தடவுங்கள்.
( ஸ்க்ரப் போல் வேண்டுமென்றால் அவற்றுடன் கோதுமை தவிடு சேர்த்துகொள்ளுங்கள்) அவை நன்றாக காய்ந்ததும் தண்ணீர் தெளித்து அழுந்த துடைத்து எடுங்கள்.வேர்க்கால்களோடு முடிகள் வெளியேறுவதைப் பார்ப்பீர்கள்.
இப்படி தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்துவந்தாலே முடிகள் நீங்குவதையும் அதன் வளர்ச்சி குறைவதையும் பார்ப்பீர்கள்.
ஓய்வு நேரத்தில் இந்த பொடியை கலந்து பயன்படுத்துங்கள்