நரைமுடியை வெள்ளையாக்க வேண்டுமா? காபித்தூளை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!
இன்றைக்கு பலர் வெள்ளை முடி பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிலும் பலர் வெள்ளை முடியைப் போக்க, தலைமுடிக்கு ஹேர் டை பூச விரும்புவார்கள்.
ஆனால் இப்படிச் செய்வதால் கூந்தல் பாதிப்படைவது மட்டுமின்றி, அதிகப் பணமும் செலவாகும்.
அந்த வகையில் வீட்டில் இருந்தப்படியே எளிய முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற முடியும். அதற்கு காபி தூள் உதவுகின்றது. தற்போது இதனை எப்படி பயன்டுத்தலாம் என்பதை பார்ப்போம்
எப்படி உதவுகின்றது?
காபி தூள் முடியின் நிறமியை ஆழமாக்கி, கறைகளை அகற்றும். இதன் காரணமாக முடி கருமையாக தெரியும்.
அதுமட்டுமின்றி, இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அத்துடன் இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்கிறது, இது முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது முடியை கருப்பாக்க உதவுகிறது.
செய்முறை
- நீங்கள் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துகிக்கொண்டு அதை கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு, அதில் 2 முதல் 3 தேக்கரண்டி காபி தூள் சேர்க்கவும்.
- இப்போது சிறிய ஃபிளேமில் சிறிது நேரம் கொதிக்க விடவும். இந்த நீர் பாதியாக மாறியதும், கேஸ்ஸை அணைக்கவும். இப்போது இந்த கலவை சிறுது ஆரியப் பிறகு உங்களின் முடியைத் திறந்து, காட்டனின் உதவியுடன், முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும்.
- பின்னர் முடியை கட்டி 1 மணி நேரம் உலர வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும்.
- நீங்கள் விரும்பினால், காபி தூள் மற்றும் மருதாணியை பேஸ்ட் செய்து, ஹேர் பேக் போல கூந்தலில் தடவலாம். எனவே இந்த செயல்முறை மூலம் உங்கள் முடி நிறம் இயற்கையாகவே கருமையாகவும் அழகாகவும் மாற்றலாம்.