வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டுமா? இதனை ட்ரை செய்து பாருங்கள்!
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே இளவயதிலேயே இள நரை பிரச்சினை ஏற்படுகிறது.
இளநரை ஏற்பட காரணம் என்னவெனில் தோலில் உள்ள, 'மெலனோசைட்ஸ்' என்ற நிறமி தான், தலை முடி, தோலுக்கு நிறம் தருவது.
இந்த நிறமியின் உற்பத்தி குறைய துவங்கினால், தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். மரபியல் காரணிகள், சுற்றுச்சூழலில் உள்ள மாசு, ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்றவை குறைவதால், இளநரை வரலாம்.
இயற்கையாகவே எப்படி இளநரையை சரி செய்யலாம்?
- இளநரையை கெமிக்கல் கலந்த கடைகளில் கிடைக்கும் ஹேர் டைகளை பயன்படுத்தி மறைக்க முயற்சி செய்யும்போது, அது மீண்டும் தோன்றுகிறது.
- அத்தோடு அதிலுள்ள கெமிக்கல்கள் தலை சம்பந்தமான பிரச்சினைகளையும், பின்னாளில் ஏற்படுத்தலாம்.
- ஆகையால் இந்த பக்கவிளைவுகளற்ற இயற்கை ஹேர்பேக்கினை ட்ரை செய்து கரு கரு கூந்தலை பெற்றுககொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை
- கற்றாளை-2
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
- கறிவேப்பிலையை கழுவி காய வைத்து கொள்ளுங்கள்.
- ஒரு பேணை எடுத்து கொள்ளுங்கள். பின்பு அது நன்றாக சூடாகும் வரை ஹை ப்லேமில் வைத்து பின் குறைத்து விடுங்கள்.
- பின் அதனை நன்றாக வருத்துக்கொள்ளுங்கள்.
- அது கருப்பு நிறத்தில் மாறும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.
- பின் அடுப்பை ஆப் செய்துவிட்டு அதை அப்படியே கூலாக விட்டு விடுங்கள்.
- அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பவுடர் பதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
- அதனை வடிகட்டியில் சளித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
- இந்த வீட்டில் செய்யப்பட்ட ஹேர் கலர் பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
- உங்கள் முடியின் நீளத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கற்றாளை இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள்.
- அல்லது கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்றாளையை பயன்படுத்தலாம்.
- கற்றாளை 1 மேசைக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
- 1 மேசைக்கரண்டி தேங்காய எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள்.
- இவை மூன்றையும் நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.
- நல்ல ஒரு பேஸ்ட் பதத்தில் வரும் வரை கலக்கிக்கொள்ளுங்கள்.
- இதனை முடியின் வேர்க்கால்களில் படுமாறு அப்ளை செய்து நன்றாக மசாஜ் குடுக்க வேண்டும்.
- ஒரு மணி நேரம் கழிய ஹெர்பல் ஷாம்பூவோ அல்லது நீங்கள் வழக்கமாக போடும் ஷம்பூவையோ பயன்படுத்தி கழுவி விடுங்கள்.
- இதனை வாரம் தோறும் செய்து வந்தால நரை பிரச்சினை, முடி உதிரவுக்கு தீர்வு கிடைக்கும்.
கறிவேப்பிலையின் பயன்கள்.
- கறிவேப்பிலையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
- இவை அனைத்தும் செல்லுலார் மீளுருவாக்கம் மற்றும் உச்சந்தலையில் உள்ள இரத்த நாளங்களில் ஆரோக்கியமான சுழற்சியை ஊக்குவிக்கின்றன.
- இந்த பண்புகள் முடி வளர்ச்சி மற்றும் தோல் புதுப்பித்தல் மற்றும் உச்சந்தலையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
- கறிவேப்பிலை நமக்கு முடி சம்பந்தமான பிரச்சினைகள் வராது தடுக்கும்.
- உணவோடு கருவேப்பிலையை பொடியாக்கி நெய்யோடு கலந்து சாப்பிட்டாலே முடி உதிர்வு பிரச்சினை ஏற்படாது.
கற்றாழையின் பயன்கள்
- கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
- ஆரோக்கியமான செல் வளர்ச்சி மற்றும் பளபளப்பான முடியை ஊக்குவிக்கின்றன.
- வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கற்றாழை ஜெல்லில் உள்ளது.
- இந்த இரண்டு கூறுகளும் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.