பிரான்சில் பணி செய்ய விருப்பமா?: உங்களுக்காக என்னென்ன பணிகள் தயாராக உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கத்தால் பணியாளர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பல நாடுகள் கொரோனா காரணமாக பணித்தலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதில் மும்முரமாக உள்ளன.
தற்போது, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பணியிடங்கள் பல காலியாக உள்ளன.
அவ்வகையில், பிரான்சில் என்னென்ன பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
1. Sales Operations Manager
இந்தப் பணி செய்வோர், விற்பனையை அதிகரிக்கும் துறைகளை திறம்பட பணி செய்யும் வகையில் வழி நடத்துவதுடன், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
2. Business Development Representative
இந்தப் பணி செய்வோர், நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளரை சரியாக கண்டுபிடித்து, நிறுவனத்தின் தயாரிப்பு அவர்களைச் சென்றடையும் சேல்ஸ் பொறுப்பைச் செய்யும் ஆரம்ப கட்ட பணியாளர்கள் ஆவர்.
3. Billing Assistant
இந்தப் பணி செய்வோர், கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ளும் துறையுடன் இணைந்து, நிதி தொடர்பான விடயங்களை உள்ளிடும் பணியை மேற்கொள்ளுவார்கள்.
எனவே, தகுதியுடையோர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.