ஜேர்மனியில் பணி செய்ய விருப்பமா?: உங்களுக்காக தயாராக இருக்கும் பணியிடங்கள்
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கத்தால் பணியாளர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பல நாடுகள் கொரோனா காரணமாக பணித்தலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதில் மும்முரமாக உள்ளன.
தற்போது, ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பணியிடங்கள் பல காலியாக உள்ளன.
அவ்வகையில், ஜேர்மனியில் என்னென்ன பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
1. Public Sector Consultant
இந்தப் பணி செய்வோர், பொதுமக்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும், நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவது மற்றும் டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார்கள்.
2. Product Analyst
இந்தப் பணி செய்வோர், ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்கால மற்றும் எதிர்கால சந்தை தேவைகளை சந்திக்குமா என்பதை அறிவதற்காக, அவற்றை மீளாய்வு செய்வார்கள்.
3. Business Development Representative
இந்தப் பணி செய்வோர், நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளரை சரியாக கண்டுபிடித்து, நிறுவனத்தின் தயாரிப்பு அவர்களைச் சென்றடையும் சேல்ஸ் பொறுப்பைச் செய்யும் ஆரம்ப கட்ட பணியாளர்கள் ஆவர்.
எனவே, தகுதியுடையோர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.