உங்கள் முகம் பட்டுபோல் மின்ன வேண்டுமா? அப்போ தினமும் இதை செய்க
உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திருகுமான அருமருந்தாக கற்றாழை விளங்குவதை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். இந்த அருமையான பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.
முகத்தில் இருக்கும் தோல் பகுதி மிகவும் மென்மையானது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். உடலுக்கு பயன்படுத்தும் பொருளை நாம் முகத்திற்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.
அது கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி, வீட்டில் உபயோகிக்கும் இயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி. எனவே எந்தெந்த பொருட்கள் நம் முகத்திற்கு உகந்தவை அல்ல என்பதை பார்ப்போம்...
தூங்குவதற்கு முன்
இரவில் தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கச் செல்லவும். இது சருமத்தை பாதிப்பிலிருந்து தடுப்பதுடன், அழுக்கினை அவ்வப்போது அகற்ற உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் தினமும்
ஆலிவ் எண்ணெய்
பூசுவதன் மூலம் முகம் சுத்தமாக இருக்கும். இதனை காலை, மாலை என இருவேளை பயன்படுத்துவது கூடுதல் பயனை அளிக்கும்.
தண்ணீர்
ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். நீர்ச்சத்து மிக்க பழங்களை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் சருமம் குளிர்ச்சியாக இருப்பதுடன், சருமம் சுருங்காமல் இருக்கும்.
சருமம் பளபளக்க
தினமும் முகத்தை மூன்று முறையாவது வெந்நீரால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் பளபளக்கும். உண்ணும் உணவே உங்கள் அழகைத் தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு குறைவாகவுள்ள உணவுகள் உண்ண வேண்டும்.
கற்றாழை
கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் பளபள வைக்கும் பேஸ் மாஸ்க். இது எல்லா வகையான சருமத்திற்கும் குறிப்பாக, வழக்கமான, எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது.
இது சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. ஒரு கோப்பையை வாழைப்பழத்தை மேஷ் செய்து, 2 ஸ்பூன் கற்றாழை மற்றும் சில தொட்டு பன்னீர் விடவும். இதை நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். உலர்ந்த பிறகு கழுவிக்கொள்ளவும்.
எலுமிச்சை
முக அழகிற்கு பயன்படுத்தும் கலவைகளில் எலுமிச்சை நீங்கள் சேர்க்க வேண்டும் என்றால் எலுமிச்சையின் அளவு சரியாக இருக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ‘சிட்ரஸ்’ என்கிற மூலக்கூறு எரிச்சலையும், அரிப்பையும் உண்டாகும். எலுமிச்சை சாறை மட்டும் தனியாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அவற்றுடன் வேறு சில பொருட்களை கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.
ஆல்கஹால்
நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் எந்த வகை பொருட்களிலும் ‘ஆல்கஹால்’ சேர்க்கப்பட்டிருந்தால் அதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் கலக்கப்பட்ட முகப்பூச்சுகளை நீங்கள் உபயோகிக்கும் பொழுது ‘ஜில்லென்று’ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இது முகத்தில் இருக்கும் தோலை பாதிப்படைய செய்யும்.
பாடி மாய்ஸ்சுரைசர்
உடலுக்கு பயன்படுத்தும் பாடி மாய்ஸ்சுரைசர் முகத்திற்கு கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. கழிவுகள் முகத்தில் இருக்கும் துளைகள் வழியாக வெளியேறுகின்றன. நீங்கள் பாடி மாய்ஸ்சுரைசர் உபயோகித்தால் முகத்தில் இருக்கும் துளைகள் அடைபட்டு கழிவுகள் வெளியேறுவது தடுக்கப்படும். இதனால் முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.