மருத்துவராக ஆசைப்பட்டவர்... இன்று ரூ 28,835 கோடி சொத்து மதிப்புடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்
பெங்களூருவை சேர்ந்த கிரண் மஜும்தார்-ஷா, ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.
பெண்களில் முதலிடத்தில்
குறித்த பட்டியலில் 82வது இடத்தைக் கைப்பற்றியுள்ள கிரண் ஷா முதல் தலைமுறை தொழிலதிபரும் உயிரி மருந்து நிறுவனமான பயோகானின் நிர்வாக இயக்குனருமாவார்.
தனித்தே போராடி சாதித்த இந்தியப் பெண்களில் ஒருவர் இந்த கிரண் ஷா. இவரது சொத்து மதிப்பு 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 28,835 கோடி என்றே ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பெங்களூருவில் பெரும் கோடீஸ்வரப் பெண்களில் முதலிடத்தில் உள்ளார். மேலும், பயோடெக்னாலஜியில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் உலகளாவிய வணிகத் தலைவராக உள்ளார் கிரண் ஷா.
71 வயதாகும் பெரும் கோடீஸ்வரியான கிரண் ஷா, உண்மையில் ஒரு மருத்துவராக வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவப் படிப்பிற்கான அனுமதி அவருக்கு கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இன்சுலின் தொழிற்சாலை
இருப்பினும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். கிரண் ஷா தனது பயோடெக் பயணத்தை 1978ல் இந்தியாவில் உள்ள தனது குடியிருப்பின் கேரேஜில் இருந்து தொடங்கினார்.
மட்டுமின்றி, மலேசியாவின் ஜோகூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய இன்சுலின் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இவரது பயோகான் நிறுவனம் அமெரிக்க சந்தையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.
மட்டுமின்றி, 2022ல் அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனமான Viatris-ஐ 3.3 பில்லியன் டொலருக்கு சொந்தமாக்கினார். இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளான பத்மஸ்ரீ (1989) மற்றும் பத்ம பூஷன் (2005) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
2019 ல், கிரண் மற்றும் இவரது மறைந்த கணவர் ஜான் ஷாவும் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ63 கோடி) கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க நன்கொடையாக அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |