ஸ்ரீராம் கிருஷ்ணனை வேலைக்கு அமர்த்த விரும்பினேன்.. ஆனால்: ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த சுவாரஸ்யம்
செயற்கை நுண்ணறிவு தொடர்பான வெள்ளை மாளிகை கொள்கை மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு ஸ்ரீதர் வேம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு வாழ்த்து
இந்திய வம்சாவளியும், சென்னையில் பிறந்தவருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை செயற்கை நுண்ணறிவுக்கான வெள்ளை மாளிகை கொள்கை மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது Zoho நிறுவனத்தின் CEO ஸ்ரீதர் வேம்பு சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், " வாழ்த்துகள் ஸ்ரீராம்! 2004 -ம் ஆண்டில் ஸ்ரீராம் கிருஷ்ணன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது, அவருடைய வலைப்பதிவை நான் கண்டேன்.
அந்த நேரத்தில் அது இந்தியாவில் இருந்து ஆரம்பகால நிரலாக்க வலைப்பதிவுகளில் ஒன்று. அதனால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
அப்போது நான் அவரை பணியமர்த்த விரும்பினேன். ஆனால், மைக்ரோசாப்ட் ஏற்கனவே அவரை வேலைக்கு அமர்த்தியது. பின்னர் அவர் தொழில்முனைவோராக மாறியதால் நாங்கள் தொடர்பில் இருந்தோம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தொழில்நுட்பக் குழுவிற்கு ஒரு சிறந்த திறமையைக் கண்டுபிடித்துள்ளார்!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |