‘நான் அப்படி சொன்னது தவறு தான்’... பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆடுகளத்தில் நமாஸ் செய்தது குறித்து தான் சொன்ன கருத்துக்காக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் கடந்த 24ம் திகதி நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று சாதனை படைத்தது.
வெற்றிக்கு பின் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆடுகளத்தில் நமாஸ் செய்தார்.
மைதானத்தில் இந்துக்கள் முன் ரிஸ்வான் நமாஸ் செய்ததை கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் கூறினார்.
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக வக்கார் யூனிஸை புகழ்பெற்ற விளையாட்டு பத்திரிகையாளர் Harsha Bhogle சாடினார்.
இந்நிலையில், தான் தெரிவித்த கருத்துக்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் ட்விட்டரில் பதிவிட்டதாவது, அந்த நேரத்தில், நான் சொன்ன கருத்து பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், அதில் எந்த நோக்கமும் இல்லை, உண்மையில் தவறு தான்.
In the heat of the moment, I said something which I did not mean which has hurt the sentiments of many. I apologise for this, this was not intended at all, genuine mistake. Sports unites people regardless of race, colour or religion. #apologies ??
— Waqar Younis (@waqyounis99) October 26, 2021
விளையாட்டு இனம், நிறம், மதம் எதுவுமின்றி மக்களை ஒன்றிணைக்கிறது என வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.