அவர் ஆசியக்கோப்பையில் இல்லை, இந்திய வீரர்களுக்கு நிம்மதி தான்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல்
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அப்ரிடி விலகியது இந்திய அணியின் முன்கள வீரர்களுக்கு நிம்மதியாக இருக்கும் என முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் கிண்டலடித்துள்ளார்.
ஆகத்து 27ஆம் திகதி ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றன.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஷாஹீன் ஷா அப்ரிடி அச்சுறுத்தலாக அமைந்தார்.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அவரது பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த நிலையில் ஷாஹீன் ஷா அப்ரிடி விலகியுள்ளது இந்திய அணியின் முன்கள வீரர்களுக்கு நிம்மதியாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் கிண்டலடித்துள்ளார்.
Shaheen’s injury Big relief for the Indian top order batsmen. Sad we won’t be seeing him in #AsiaCup2022 Get fit soon Champ @iShaheenAfridi pic.twitter.com/Fosph7yVHs
— Waqar Younis (@waqyounis99) August 20, 2022
அவரது ட்விட்டர் பதிவில், 'ஷாஹீனின் காயம் இந்திய அணியின் முன்கள வீரர்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும். ஆசியக்கோப்பையில் அவரை காண முடியாதது வருத்தமளிக்கிறது. விரைவில் ஷாஹீன் ஷா உடல் தகுதியை எட்ட வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
PC: AP