போரால் சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை அதிகரிக்கும் நிலை
மத்திய கிழக்கு போரால் சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என பிரபல ஐரோப்பிய வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.
வீட்டு வாடகை அதிகரிக்கக்கூடும்
மத்திய கிழக்கு போரால் எரிசக்தி கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதனால் கட்டுமான செலவு அதிகரிக்கலாம் என்றும், அது வீட்டு வாடகைகள் மீண்டும் அதிகரிக்கும் நிலையை உருவாக்கக்கூடும் என்றும் பிரபல ஐரோப்பிய வங்கியான Raiffeisen தெரிவித்துள்ளது.

எண்ணெய் விலை 10 சதவிகிதம் அதிகரிக்கும்போது, அதனால், கட்டுமானம் தொடர்பிலான வரிகள் 1 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்பது கணக்கீடு.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஜெனீவா ஏரி பகுதியில் வீடுகள் காலியாக இருக்கும் அளவு 0.6 சதவிகிதமாகவும், வீடுகள் கட்டப்படுவதோ மிகக் குறைவாகவும் உள்ளதால், அந்தப் பகுதியில் வீட்டு வாடகைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |