வாகன விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்! எப்படி இருக்கிறார்?
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்ன் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
மகன் ஜாக்சனுடன் வார்ன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, தவறி விழுந்து 15 மீட்டருக்கு மேல் சறுக்கி சென்றதாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனக்கு கெஞ்சம் அடிபட்டு, காயம் ஏற்பட்டிருக்கிறது மிகவும் வலியுடன் இருக்கிறேன் என விபத்துக்குப் பிறகு வார்ன் கூறியுள்ளார்.
பலத்த காயமடையாமல் தப்பித்த வார்ன், மறுநாள் மிகவும் வலியை அனுபவித்துள்ளார்.
52 வயதான வார்ன், தனது கால் உடைந்திருக்கலாம் அல்லது இடுப்பில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இருப்பினும், டிசம்பர் 8 ஆம் திகதி கபாவில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஒளிபரப்பு பணிகளைச் வார்ன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.