என்னிடம் திரும்பி வந்துவிடுங்கள் அப்பா... ஷேன் வார்னே மகள் உருக்கம்!
அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது மகள் சம்மர் தனது தந்தை திரும்பி வரவேண்டும் என உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், அவரது மகள் சம்மர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தந்தையே என்னால் இதை நம்ப முடியவில்லை, எனக்கு வார்த்தைகள் வரவில்லை நான் எதோ கனவு காண்பது போல் உணர்கிறேன், அதிலிருந்து என்னை நீங்கள் எழுப்பி ‘யு ஆர் ஓகே’ என கூறும் உங்களின் அன்பான குரலுக்காக காத்து கொண்டிருக்கிறேன்.
உலகின் அழகான மனிதர்களுக்கு இயற்கை தன் கோரமுகத்தை இப்படியா காட்டும்? என்று அச்சப்படுகிறேன்.
உங்கள் இனிமையான குரலால் எப்போது மீண்டும் “everything is going to be okay” என சொல்லுவீர்கள், இனி யார் எனக்கு குட் நைட், குட் மார்னிங், மற்றும் ஐ லவ் யு போன்ற வார்த்தைகளை சொல்லுவார்கள்.
உங்கள் சிரிப்பை மீண்டும் ஒருமுறை கேட்க என்ன வேண்டுமானாலும் செய்வேன், உங்களுடன் மீண்டும் இறுதியாக ஒருமுறை இருப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்.
நீங்கள் இறப்பதற்கு முன்பு, உங்கள் இறுதி மூச்சி உங்களை விட்டு பிரிவதற்கு முன்பு உங்களிடம் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
இப்பொது நீங்கள் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் என் இதயத்தில் எப்போதும் வாழ்வீர்கள், சொர்க்கத்தில் உங்களுடன் நான் வந்து இணையும் வரை உங்கள் நினைவுகளை நேசிப்பேன்.
என்றென்றும் உங்கள் மகளாக உங்களை நான் பெருமைப்படுத்துவேன் என மிக உருக்கமான வார்த்தைகளை ஷேன் வார்ன் மகள் சம்மர் பதிவிட்டுள்ளார்.