BBL இறுதிப்போட்டியில் ருத்ர தாண்டவமாடிய கேப்டன் வார்னர் (வீடியோ)
பிக்பாஷ் லீக் இறுதிப் போட்டியில் வார்னர், சங்காவின் அதிரடியால் சிட்னி தண்டர் அணி 182 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இறுதிப்போட்டி
ஹோபர்ட்டில் பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ஹோபர்ட் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் அணி முதலில் துடுப்பாடியது.
அணித்தலைவர் டேவிட் வார்னர் (David Warner) மற்றும் ஜேசன் சங்கா (Jason Sangha) கூட்டணி அதிரடியில் மிரட்டியது.
David Warner 🆚 Chris Jordan
— KFC Big Bash League (@BBL) January 27, 2025
A shot so good, CJ couldn't believe it! #BBL14 pic.twitter.com/1o5Bc7aKzG
அடித்து நொறுக்கிய வார்னர்
வார்னர் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசிய நிலையில், எல்லிஸ் பந்துவீச்சில் வேட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சங்கா மற்றும் வார்னர் கூட்டணி 62 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த கில்க்ஸ் முதல் பந்தில் ஆட்டமிழக்க, சாம் பில்லிங்ஸ் 14 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாசினார்.
அரைசதம் அடித்த ஜேசன் சங்கா 42 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் குவித்தார். ஓலிவர் டேவிஸ் 26 (19) ஓட்டங்களும், கிறிஸ் கிரீன் 16 (9) ஓட்டங்களும் எடுக்க சிட்னி தண்டர் (Sydney Thunder) 182 ஓட்டங்கள் குவித்தது.
ஹோபர்ட் அணித்தலைவர் நாதன் எல்லிஸ் (Nathan Ellis) 3 விக்கெட்டுகளும், ரிலே மெரிடித் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
SENT to the hill 💥
— KFC Big Bash League (@BBL) January 27, 2025
David Warner is going BIG in Hobart. #BBL14 pic.twitter.com/g5xe1bJK8B
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |