சிக்ஸர்மழை பொழிந்தும் வீண்! 100 பந்துகள் போட்டியில் தட்டித்தூக்கிய வில்லியம்சனின் படை
வெல்ஷ் ஃபையர் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரெட் மென்ஸ் தொடர் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேவிட் வார்னர் அதகளம்
கார்டிஃப்பில் நடந்த 100 பந்துகள் போட்டியில், கேன் வில்லியம்சனின் லண்டன் ஸ்பிரிட் (London Spirit) அணியும், டாம் அபேலின் வெல்ஷ் ஃபையர் (Welsh Fire) அணியும் மோதின.
David Warner is enjoying his visit to Sophia Gardens! ⚡️#TheHundred pic.twitter.com/0vHSh18Z5p
— The Hundred (@thehundred) August 9, 2025
முதலில் ஆடிய லண்டன் அணி 5 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் (David Warner) 45 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய வெல்ஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட பேர்ஸ்டோவ்
எனினும், தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) சிக்ஸர்களை பறக்கவிட்டு கடைசிவரை போராடினார்.
Unreal! 🙇#TheHundred pic.twitter.com/kVUOWGV23e
— The Hundred (@thehundred) August 9, 2025
இறுதியில் வெல்ஷ் அணி 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், லண்டன் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |