நிலத்தை விட்டு அந்தரத்தில் பறந்த ஸ்டம்ப்! ஷமியின் வேகத்தால் மிரண்ட வார்னர் வீடியோ
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி க்ளீன் போல்டாக்கினார்.
அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியுள்ளது.
டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆட்டத்தை தொடங்கினர். கவாஜா சந்தித்த 3வது பந்திலேயே சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார்.
பறந்த ஸ்டம்ப்
அதன் பின்னர் வார்னருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷமி வீசிய பந்து ஸ்டம்பை தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் ஸ்டம்ப் நிலத்தை விட்டு பெயர்ந்து அந்தரத்தில் பறந்து சென்று விழுந்தது.
What a delivery by Mohammad Shami - absolute peach. pic.twitter.com/BSdRwqPMJv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 9, 2023
இதனால் டேவிட் வார்னர் மிரண்டு போனார். 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஒரு ரன்னில் வெளியேறினார்.
அவுஸ்திரேலிய அணி 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஸ்மித் மற்றும் லபுசாக்னே ஆகிய இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.