இரட்டை இமாலய சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்!
ஐபிஎல்-யில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியது.
இந்த போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 26 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வார்னர் முதல் இடம் பிடித்துள்ளார்.
அவர் கொல்கத்தாவின் சுனில் நரைன் பந்துவீச்சுக்கு எதிராக 176 ஓட்டங்கள் விளாசியுள்ளார். இரண்டு முறை மட்டும் அவரது பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.
மேலும், ஒரு அணிக்கு எதிராக 1000 ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் வார்னர் இணைந்துள்ளார். அதே கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் நேற்று 1000 ஓட்டங்களை கடந்தார். இதற்கு முன்பு அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 1005 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல்-யில் ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:
- டேவிட் வார்னர் (176) - சுனில் நரைன்
- சுரேஷ் ரெய்னா (175) - பியூஸ் சாவ்லா
- விராட் கோலி (160) - அஸ்வின்
- விராட் கோலி (158) - மிஸ்ரா
ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:
- ஷிகர் தவான் (1029) - சென்னை (எதிரணி)
- ரோகித் சர்மா (1018) - கொல்கத்தா (எதிரணி)
- டேவிட் வார்னர் (1005) - பஞ்சாப் (எதிரணி)
- டேவிட் வார்னர் (1000) - கொல்கத்தா (எதிரணி)