எனக்கு சதம் வேண்டாம்.. நீ பறக்கவிடு.. வார்னரின் செயலுக்கு குவியும் பாராட்டு!
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும், சக வீரர் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று விட்டுக் கொடுத்த வார்னரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடந்தது. டெல்லி அணி இந்த போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியில் மிரட்டிய டெல்லி வீரர்கள் டேவிட் வார்னர் 92 ஓட்டங்களும், ரோவ்மான் பாவெல் 67 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
வார்னர் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தருகிறேன் நீங்கள் சதம் விளாசுங்கள் என பாவெல் கூறியுள்ளார். ஆனால் வார்னரோ நீங்கள் அடித்து நொறுக்குங்கள் சதம் அடிப்பது முக்கியமல்ல, அணியின் ஸ்கோர் உயர வேண்டும் என்று பதில் அளித்து விட்டார்.
— ChaiBiscuit (@Biscuit8Chai) May 6, 2022
அதனைத் தொடர்ந்து பாவெல் சிக்ஸர்களை பறக்கவிட்டதால் டெல்லி அணி 200 ஓட்டங்களை தாண்டியது. முதல் இன்னிங்ஸ் முடிந்து வார்னர் களத்தை விட்டு வெளியேறியபோது, அவரிடம் வந்த ஐதராபாத் அணித்தலைவர் வில்லியம்சன் அவரை பாராட்டி முதுகில் தட்டி கொடுத்தார்.
மேலும் புவனேஷ்வர் குமாரும் வார்னரை பாராட்டினார். இதனைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து, சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.