டேவிட் வார்னர், ரூதர்போர்ட் அதிரடியில் Sydney Thunder த்ரில் வெற்றி! கடைசி பந்தில் பவுண்டரி (வீடியோ)
BBL டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தியது.
டேவிட் வார்னர் அபாரம்
பெர்த்தில் நடந்த பிக்பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் குவித்தது. ஃபின் ஆலன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் பிளேக் நிகிடாரஸ் 1 ரன்னில் வெளியேற, டேவிட் வார்னர் மற்றும் மேத்யூ கில்க்ஸ் அதிரடியில் மிரட்டினர்.
No way!
— KFC Big Bash League (@BBL) January 3, 2025
This crowd catch is classic 🤣 @KFCAustralia #BucketMoment #BBL14 pic.twitter.com/qeFToETbHV
இவர்களது கூட்டணி 56 பந்துகளில் 89 ஓட்டங்கள் குவித்தது. கில்க்ஸ் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து டேவிட் வார்னர் (David Warner) 33 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரூதர்போர்டு மிரட்டல்
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த ரூதர்போர்டு, அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார்.
3வது டாட் ஆக, அடுத்த பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் லெக் பைஸ் மூலம் 2 ஓட்டங்கள் கிடைக்க, தண்டர் அணிக்கு கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
பரபரப்பான சூழலில் ரூதர்போர்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |