21 பந்துகளில் 50 ரன் விளாசியும் வீண்: PSL-யில் தெறிக்கவிட்ட வார்னர் படை
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது.
மொயீன் அலி மிரட்டல்
கடாஃபி மைதானத்தில் நடந்த PSL 2026 போட்டியில், வார்னரின் கராச்சி கிங்ஸ் மற்றும் சவுத் ஷகீல் தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய கராச்சி அணி 20 ஓவர்களில் 181 ஓட்டங்கள் குவித்தது. மொயீன் அலி 48 (29) ஓட்டங்களும், டேவிட் வார்னர் 35 (22) ஓட்டங்களும் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் சவுத் ஷகீல் மற்றும் ஷமைல் ஹுசைன் கூட்டணி அதிரடியில், முதல் விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தது.

சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷமைல் ஹுசைன் (Shamyl Shakeel) 21 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் தோல்வி
அடுத்து கவாஜா நஃபே 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஷகீல் 33 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ரோஸோவ் 25 ஓட்டங்களும், நவாஸ் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால், அதன் பின்னர் வந்த வீரர்கள் ஹசன் அலியின் (Hasan Ali) மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பென் மெக்டெர்மோட் மட்டும் வெற்றிக்காக போராட, குவெட்டா அணி 20 ஓவர்களில் 167 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
மெக்டெர்மோட் 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். ஹசன் அலி 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், மொயீன் அலி, ஆடம் ஜாம்பா மற்றும் சல்மான் அகா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |