ஒரே வரியில் கணவரை விமர்சித்தவர்களை வெட்கி தலைகுனிய வைத்த வார்னிரின் மனைவி!
டி20 உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னர் வென்ற பிறகு அவரது மனைவி கணவரை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து தலைகுனிய வைத்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோவர் மாதம் பார்ம் அவுட்டால் டேவிட் வார்னரை ஐதராபாத் அணி ஓரங்கட்டியது.
இதைத்தொடர்ந்து, வார்னரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தவிட்டது என பலர் எழுதினர்.
ஆனால், விமர்சித்தவர்கள் முகத்தில் கரியை பூசும் வகையில் டி20 உலகக் கோப்பை தொடரில் வார்னர் பேட்டிங்கில் பட்டையை கிளப்பினர்.
அதுமட்டுமன்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
2021 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 195 ரன்கள் அடித்த வார்னர், டி20 உலகக் கேப்பை தொடரில் 7 இன்னிங்ஸில் 289 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
டி20 உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னர் வென்ற பிறகு அவரது மனைவி கணவரை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Out of form, too old and slow! ?? congratulations @davidwarner31 pic.twitter.com/Ljf25miQiM
— Candice Warner (@CandiceWarner31) November 14, 2021
தனது ட்விட்டர் பக்கத்தில் கேண்டீஸ் வார்னர் பதிவிட்டதாவது, பார்ம் அவுட், ரொம்ப வயதாகிவிட்டது, ரொம்ப மந்தமாக விளையாடுகிறார் என விமர்சனங்களை பதிவிட்டு விமர்சர்களை தலைகுனிய வைத்த வார்னரின் மனைவி, தன்னுடைய வாழ்த்துக்களை தன் கணவருக்கு தெரிவித்துள்ளார்.