வலுவான போட்டி உள்ளது.. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் வெற்றி வேண்டும்: வார்னர்
இனி வரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் 3 அரைசதங்கள் அடித்துள்ள வார்னர், கடைசி போட்டியில் சொதப்பினார்.
எனினும் தமது அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து முன்னேறி, இறுதிப் போட்டிக்கு வருவதற்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். ஒரு வலுவான போட்டி உள்ளது, நாங்கள் இரண்டு அணிகளுக்கு எதிராக வர வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக நாங்கள் வர வேண்டும்.
நான் அல்லது பிரித்வி ஷா அல்லது மிட்செல் மார்ஷ் 80 , 90 ஓட்டங்கள் அல்லது சதம் அடிப்பது மிக முக்கியமான விடயம் என்று நான் நினைக்கிறேன். நல்ல ஓட்டங்களை இலக்காக நிர்ணயிப்பது அல்லது பெரிய ஓட்டங்கள் இலக்கை சேஸ் செய்வதற்கு அதுதான் முக்கியம்' என தெரிவித்துள்ளார்.