நீங்கள் சிறப்பாக பந்துவீசினீர்கள் தல! ஆனால் என் கை..வலியால் துடித்த டேவிட் வார்னரின் ட்வீட்
டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் விக்கெட் வீழ்ந்தபோது வார்னரின் கை விரல்களில் பலத்த அடிபட்டது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இலங்கை வீரர் வாண்டர்சேவுக்கு பந்து வீசினார்.
ஹெட் வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்த்துவிட்டு சென்றபோது, டேவிட் வார்னர் அதனை கேட்ச் செய்ய முயற்சித்தார். இதில் அவருக்கு விரல்களில் பலத்தை அடிபட்டது.
இதனை ஹெட் முதலில் கண்டுகொள்ளவில்லை. அவர் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகே வார்னர் வலியால் துடித்ததை சக வீரர்கள் கவனித்தனர்.
Oh dear, well bowled Heady but my Jatz cracker ?♂️?♂️?♂️ https://t.co/PEr3WbFYnJ
— David Warner (@davidwarner31) July 1, 2022
இந்த வீடியோவை வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ஓ டியர், சிறப்பாக பந்துவீசினீர்கள் தல ஆனால் என்னுடைய கை விரல்கள் உடைந்துவிட்டன என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.