இரண்டு பிட்சாகி வந்த பந்தை சிக்ஸர் பறக்கவிட்ட வார்னர்! நோ பால் கொடுத்த நடுவர்: வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஹபீஸ் பந்து வீச்சில் வார்னர் சிக்ஸர் பறக்க விட்ட வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மொகமது ரிஷ்வான் 52 பந்தில் 67 ஓட்டங்களும், பாகர் ஜமான் 32 பந்தில் 55 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவரில் 38 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சற்று முன் வரை 12 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
குறிப்பாக ஆட்டத்தின் 7.1 பந்தை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹபீஸ் வீசினார். அப்போது பந்தானது இரண்டு பிட்சாகி வந்ததால், வார்னர் அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
பந்து இரண்டு முறை குத்தி பேட்ஸ்மேனுக்கு சென்றதால் நடுவரும் நோ பால் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
— - (@wrogn_) November 11, 2021