மைதானத்தில் தகாத வார்த்தை பயன்படுத்தி சிக்கிய இலங்கை வீரர்! ஓடியோ பதிவானதால் அதிர்ச்சி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஓவர்களை சரியான நேரத்துக்கு வீசி முடிக்காத காரணத்தால், இலங்கை அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று சிட்னியில் நடந்த 2வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி வெற்றிப்பெற்றது அவுஸ்திரேலியா.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கின்றது.
2வது டி20 போட்டியில் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவரை வீச தவறியதன் காரணமாக, இலங்கை வீரர்களுக்கு 20 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் 2.22 சரத்தின்படி, நிர்ணயிக்கப்படும் நேரத்தில், பந்துவீச தவறுவதற்கும், ஓவர்கள் தாமதமாவதற்கும், அணியின் வீரர்களுக்கு ஓவர் ஒன்றிற்கு போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபாராதமாக விதிக்கப்படும்.
இதனிடையே, 2வது போட்டியில் தகாத வார்த்தையை பயன்படுத்திய இலங்கை வீரர் பதும் நிசாங்காவுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துளது, மேலும், அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
2வது போட்டியில் பேட்டிங்கின் போது பந்தை தவற விட்ட இலங்கை வீரர் பதும் நிசாங்க தகாத வார்த்தையை பயன்படுத்தினார், இது களத்திலிருந்து இருந்து வீரர்களுக்கு கேட்டது, அதுமட்டுமின்றி ஸ்டம்பில் உள்ள மைக்கிலும் பதிவானது.
இலங்கை அணி கேப்டன் தசுன் சானக்க மற்றும் பதும் நிசாங்க ஆகிய இருவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், தண்டனைகளை ஏற்றுக்கொண்டனர், எனவே முறையான விசாரணைக்கு அவசியமில்லை என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.